சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. மேலும் இரவு வேளைகளில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் அந்த கட்டிடம் மாறி வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.