தியாகதுருகத்தில் அமைந்துள்ள மலைக்குன்று தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலைக்குன்றை சுற்றிலும் மதுப்பிரியர்கள் தினமும் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு வரும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே போலீசார் அப்பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று அங்கு மது அருந்தும் மதுப்பிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?