வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-01-19 12:07 GMT

கூடலூர் நகருக்குள் முக்கிய சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சேறும், சகதியுமாக இருந்தது. தற்போது மழை குறைந்து விட்டதால் குண்டும், குழியுமாக கிடப்பதுடன் புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்