ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற வருகின்றனர். டாக்டர்கள் பற்றாக்குறையால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும்.