கூடுதல் விலைக்கு மது விற்பனை

Update: 2025-01-19 12:02 GMT

கோத்தகிரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த நேரத்தில் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதுவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கூலித்தொழிலாளர்கள் சரிவர வேலைக்கு செல்லாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்களது குடும்பம் பாதிக்கப்படுகிறது. எனவே அரசு நிர்ணயித்த நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் மது விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்