ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சில பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?