வேகத்தடைக்கு வெள்ளைக்கோடு தேவை

Update: 2025-01-19 10:46 GMT

கீழ்வேளூர் சின்னகடை தெருவில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளில் வெள்ளைக்கோடுகள் இல்லாமல் இருக்கிறது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் வருபவர்கள் வேகத்தடையில் வெள்ளைக்கோடு இல்லாமல் இருப்பதால் நிலை தடுமாறி கீழே விழும் சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சின்னகடை தெருவில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளைக்கோடுகள் வரைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்