சுகாதார சீர்கேடு

Update: 2025-01-19 10:46 GMT

தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி அங்கன்வாடி மையம் அருகே மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி உள்ளது. இந்த தொட்டியின் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகள் குவிந்து கிடப்பதால் அங்கன்வாடி மையத்துக்கு வருபவர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை பயன்படுத்துபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்