காஞ்சீபுரம் மாவட்டம், நீர்வள்ளுர் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக கால்வாயில் விடப்படுகிறது. இதனால் அந்த பகுதி அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.