புதுவை முதலியார்பேட்டை 100 அடி மேம்பாலத்தில் நடுவே உள்ள தடுப்புச்சுவர் உடைந்து உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறம் மாறுகிறார்கள். இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே மேம்பாலத்தில் உடைந்த தடுப்பு சுவரை கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.