மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் இல்லை. இதனால் பயணிகள் ஆங்காங்கே இயற்கை உபாதைகள் கழிப்பதால் பயணிகள் பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் பஸ் நிலைய வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமிநாதன், மேட்டூர்.