கொல்லிமலை சோளக்காட்டில் இருந்து செம்மேடு செல்லும் பிரதான சாலையில் திண்டுப்பட்டி கிராமம் உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடத்தை சுற்றி செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் வெயில், மழையில் வருகிற பொதுமக்கள் அங்கு சிறிது நேரம் நின்று செல்ல முடியாத அவல நிலை இருந்து வருகிறது. மேலும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த நிழற்கூடத்தை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரராமன், சோளக்காடு.