பயணிகள் அச்சம்

Update: 2025-01-12 16:38 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் பஸ் நிலையம் பகுதியில் அனுமதியின்றி லாரிகள், பள்ளி வாகனங்களை நிறுத்துவதால் பயணிகளுக்கும், பஸ்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் இரவு வேளையில் நிறுத்தப்படும் லாரிகள் பகல் பொழுதில் அதிவேகமாக பஸ் நிலைய வளாகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடன் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். எனவே பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் லாரிகள், பள்ளி வாகனங்களை அங்கு நிறுத்தாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குணா, மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்