வத்தலக்குண்டு பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை தெருவில் நடந்து செல்பவர்களை கடிப்பது போல் துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் தெருவில் செல்லும் நிலை உள்ளது. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்களையும் தெருநாய்கள் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று அச்சுறுத்துகின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.