தர்மபுரி கடைவீதியில் இருந்து செல்லும் எஸ்.வி. சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த அரசு மருத்துவக்கல்லூரியின் எதிரே உள்ள சாலையின் ஓரத்தில் மயானம், இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் தகன மேடை உள்ளன. இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்கள் இறுதிச்சடங்கு நடத்துவதற்காக கொண்டு வரப்படும் போது பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இவை முறையாக அகற்றப்படாமல் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விமல், தர்மபுரி.