ரிஷிவந்தியம் அருகே ஈருடையாம்பட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இது வரை திறக்கப்படவில்லை. இதனால் அந்த கட்டிடம் சேதமடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சுகாதார வளாக கட்டிடத்தை உடனே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டியது அவசியம்.