திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் அதிகளவில் மதுப்பிரியர்கள் சுற்றித்திரிகின்றனர். இவர்கள் மது அருந்திவிட்டு பஸ் ஏற வரும் பயணிகளுக்கு தொல்லை தருவது மட்டுமின்றி மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து செல்கின்றனர். உடைந்த பாட்டில் துண்டுகள் பஸ் ஏற வரும் பயணிகளின் பாதங்களை பதம் பார்த்து விடுவதால் அவர்கள் கடும் அவதியடைகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.