விளையாட்டு மைதானம் வேண்டும்

Update: 2025-01-12 15:18 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள எண்ணற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு திறம்பட செயல்பட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றும் வருகின்றனர். ஆனால் இங்கு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கென விளையாட்டு மைதானங்கள் எதுவும் இல்லை. இதனால் அவர்கள் சிரமமடைந்து வருகின்றனர். மாணவ-மாணவிகளின் நலன்கருதி அப்பகுதியில் அரசு சார்பில் விளையாட்டு மைதானம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்