ஈரோடு பஸ் நிலையத்தில் மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடம் உள்ளது. பஸ் ஏற வரும் பயணிகள் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கழிப்பிடம் பராமரிப்பின்றியும் காணப்படுகிறது. கதவு, தாழ்ப்பாள் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே கழிப்பிடத்தை பராமரிக்கவும், குறைவான கட்டணம் வசூலிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.