விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் அச்சமடைகின்றனர். சாலையில் சுற்றும் தெருநாய்களால் அவ்வப்போது விபத்துக்களும் அப்பகுதியில் நடக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.