ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து காடுதுலா சாலையில் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை என்று ரவிச்சந்திரன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.