சில்லறை தட்டுப்பாடு

Update: 2025-01-12 13:39 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த சில வாரங்களாக அனைத்து கடைகளிலும் கடும் சில்லறை தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு கடைக்காரர்களிடம் பணம் கொடுத்துவிட்டு சில்லரைக்காக நீண்ட நேரம் காத்து நிற்கும் நிலை உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் அப்பகுதியில் நிலவும் சில்லறை தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்