அரியலூர்-செந்துறை சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் நடந்து சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் எளிதில் நடந்து செல்லும் வகையில் சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைபாதையானது ஒரு சில இடங்களில் உடைந்தும், கம்பிகள் நீட்டிக்கொண்டும் உள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக செல்பவர்கள் இந்த குழிகளில் விழுவதற்கும், கம்பிகள் குத்தி காயம் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும் இரவு நேரங்களில் இந்த குழிகள் இருப்பதும் சரிவர தெரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு இந்த நடைபாதையை சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.