காஞ்சீபுரம் மாவட்டம், கந்தன்சாவடி எம்.ஜி.ஆர்.சாலை பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இந்த பகுதி உள்ள நடைபாதை வழியாக தினமும் ஏராளமான பயணிகள் நடந்து சென்று கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த நடைபாதை சேதமடைந்து மிகவும் ஆபத்தான முறையில் உள்ளது. இதன் வழியாக செல்லும்போது பொதுமக்கள் தவறிவிழும் அபாய நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.