காஞ்சீபுரம் மாவட்டம், வட்டாட்சியர் வளாகத்தில் ஆந்திரசன் பள்ளி, சார் பதிவாளர் அலுவலர்கள், சப் சிறை, கோர்டு, தீயணைப்பு நிலையம், தபால் நிலையம் ஆகிய அலுவலகங்கள் பல ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். அவசர தேவைக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் வட்டாட்சியர் அலுவலகம் வெளியே சென்று ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து வர வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனுக்காக வட்டாட்சியார் அலுவலக வளாகத்தில் ஏ.டி.எம்.எந்திரம் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வணே்டும்.