செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அந்த ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல பயணிகள் நடை மேம்பாலம் உள்ளது. அதில் 3-வது நடைமேடையில் இருந்து பயணிகள் நடை மேம்பாலத்திற்கு செல்வதற்கு உள்ள படிகட்டு பகுதியில் உள்ள இரும்பு கைப்பிடி சேதமடைந்து உள்ளது. இதனால் வயதானவர்கள் அந்த வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.