கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

Update: 2025-01-12 09:04 GMT

சென்னை ஆர்.கே. நகர் மணலி சாலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு உள்ள போலீஸ் நிலையம் அருகே கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. 2 மாதங்கள் ஆகியும் பணிகள் முடியவில்லை. ஆபத்தான முறையில் பள்ளம் உள்ளதால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் தவறி விழும் அபாயம் உள்ளது.எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த கால்வாய் பணியை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்