நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து இந்துகல்லூரி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீரோடை முறையாக பராமரிக்காதால் மூடப்பட்டு காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் தேங்குவதால் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தூர்ந்துபோன மழைநீர் ஓடையை தூர்வாரி முறையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், கோட்டார்.