கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை பயணிகளை கடிக்க பாய்வதுடன், விரட்ட வருபவர்களையும் விரட்டி கடிக்கின்றன. மேலும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திவிட்டும் செல்வதால் வியாபாரிகள் அவதியடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் விரைந்து குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.