உயா் கோபுர மின்விளக்கு சரிசெய்யப்படுமா?

Update: 2025-01-05 17:42 GMT
உளுந்தூர்பேட்டை அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே பழுதடைந்துள்ள உயர் கோபுர மின்விளக்கை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்