செஞ்சி அருகே நரசிங்கராயன்பேட்டை ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகர் 4-வது தெருவில் மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த மின்கம்பம் மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் அங்கு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.