மதுரை நகர் மஹால் குதிரைலாயத் தெருவில் கடந்த ஒரு மாதமாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த வழியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள். நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகிறார்கள். எனவே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அப்பகுதியில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைத்து தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.