தெருநாய்கள் தொல்லை

Update: 2025-01-05 13:46 GMT

நாமக்கல் மாநகராட்சியை ஒட்டி உள்ளது வகுரம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மாருதிநகர், பொன்விழாநகர் பகுதிகளில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துகின்றன. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் அச்சத்தில் பயணிக்க வேண்டி உள்ளது. இதேபோல் சிறுவர், சிறுமிகளையும் அடிக்கடி தெருநாய்கள் துரத்துகின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி நிரவாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாறன், நாமக்கல்.

மேலும் செய்திகள்