வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் முட்புதர்கள் அதிக அளவு காணப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள், விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சமடைகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் முட்புதர்களை சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
-குமார், அத்தனூர்.