ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் கொசுமருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.