பர்கூர் பஸ் நிலையத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகளுக்கு மின் ஒயர்கள் செல்கிறது. இந்த கம்பத்தை ஒட்டி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. கம்பத்தில் உள்ள மின் ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மரை ஒட்டி உள்ள பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-புகழ், பர்கூர்.