புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-01-05 13:02 GMT

கரூர் என்.எஸ்.கே. நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, தற்போது சிறு சிறு பணிகளே உள்ள நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடித்து சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்