தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுமா?

Update: 2025-01-05 11:39 GMT

அரியலூர் பழைய அரசு மருத்துவமனைக்கு தினமும் பல்வேறு பொதுமக்களும், நோயாளிகளும் வந்து செல்கின்றனர். இதனால் இந்த மருத்துவமனை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். ஆனால் இரவு நேரங்களில் நோயாளிகளைவிட அதிகமான அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும், இந்த சாலை வழியாக நடந்து செல்பவர்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இவ்வாறான தெருநாய்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கருத்தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

மயான வசதி