கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவையை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அடிக்கடி அலைவரிசை சேவை பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டாலும் கண்டுகொள்வதில்லை. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் அவசர நேரத்தில் தகவல்களை பரிமாற கூட முடியவில்லை. இதனால் அவர்கள் தவிக்கும் நிலை உள்ளது. எனவே பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அலைவரிசை சேவை சீராக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.