கோத்தகிரியில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதியான டானிங்டன் சந்திப்பு பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து ஒளிராமல் கிடக்கிறது. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், பழுது நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். விபத்து, குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அந்த உயர் கோபுர மின்விளக்கை மீண்டும் ஒளிர வைக்க வேண்டும்.