பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த குட்டை அருகே, கட்டிடக் கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே குட்டையில் கட்டிட, கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.