காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், ஒரே ஊராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஊராட்சி செயலர்களை ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வட்டார அளவில் பணியிடை மாறுதல் செய்யப்பட்டது. ஆனால், மாடம்பாக்கம் ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர் மாற்றப்படவில்லை. ஒரே ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊராட்சி செயலரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.