விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-01-05 09:35 GMT

சென்னை நுங்கம்பாக்கம், ரெயில்வே சுரங்க பாதை மோசமான நிலையில் உள்ளது. இதனால் சூளைமேட்டில் இருந்து லயோலா மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். லேசான மழை பெய்தாலே தண்ணீர் தேங்குவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட பெரிய பள்ளங்கள் உள்ளதால் காலை நேரங்களில் அந்த பகுதியில் கடும் போக்கு நெரிசல் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்