பொதுமக்கள் அவதி

Update: 2025-01-05 09:34 GMT

சென்னை மணலி, சந்தான கிருஷ்ணன் தெருவில் சோலஸ் அரசு மருத்துவமனை உள்ளது. இதன் அருகில் உள்ள மின்மோட்டாரில் இருந்து தான் மணலி பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த மின்மோட்டார் கடந்த சில நாட்களாக வேலை செய்யவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே குடிநீர் வாரிய அதிகாரிகள் மின்மோட்டாரை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்