சென்னை அயனாவரம், பெரியார் சாலையில் உள்ள ஒரு வீட்டின் முன்பக்கம் மரம் வளர்ந்து உள்ளது. இதனால் வீட்டிக்கு சென்று வர அந்த குடும்பத்தினர் அவதியடைந்து வருகின்றனர். சில நேரங்களில் மரத்தில் தலை மோதி முதியவர்கள், சிறியவர்கள் காயம் அடைகின்றனர். சாலையின் அருகில் இருப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த ராட்சத மரத்தை வெட்டி அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.