
பல்லடம், மாணிக்காபுரம் ரோட்டில் சோலார் (சூரிய) மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சூரிய மின்விளக்கு காற்றினால் சாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த சூரிய மின் விளக்கு பயன்பாடு இன்றி வீதியில் விழுந்து கிடக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சூரிய மின்விளக்கை பராமரிப்பு செய்து மீண்டும் எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.