தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவை அவ்வழியாக நடந்து செல்பவர்களையும், பள்ளி மாணவா்களையும் கடிக்கப்பாய்கின்றன. இதனால் வீடுகளை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.