ரிஷிவந்தியம் ஊராட்சியை அடுத்த பாக்கம் புதூர் கிராமத்தில் அதிகளவில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை அங்குள்ள சேற்றில் புரளுவது மட்டுமின்றி தெருக்களில் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. அதன் உடலில் இருந்து வழியும் கழிவுநீர் தெருக்களில் விழுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள், சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.