சேலம் ஆட்டையாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக பணி முடிந்து வாகனங்களில் வருபவர்களையும், நடந்து வருபவர்களையும் துரத்தி சென்று கடிக்கிறது. எனவே இந்த வழியாக வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் எனறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சங்கா், ஆட்டையாம்பட்டி.