சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவின் முன் பகுதியில் சாக்கடை கால்வாயை மூடியுள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து ஆபத்தான பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் புதிதாக மருத்துவமனைக்கு வருவோர் பள்ளத்தில் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த சிலாப்புகளை நீக்கி விட்டு புதிய சிலாப்புகளை பொருத்த வேண்டும்.
-ராஜா, சேலம்.